தமிழகம்

கடத்தல் வழக்கில் சிக்கிய இளைஞர் மரணம்? - மதுரை அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலைமறியல்

செய்திப்பிரிவு

மதுரை 

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜூ மகன் பார்த்திபன். இவரை கடந்த 19-ம் தேதி ஒரு கும்பல் கடத்தி ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டியது.

இது தொடர்பாக ராஜூ அவனியா புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிப்படையினர் விசாரித்தனர். கடத்தல் கும்பல் கேட்ட தொகையை பார்த்திபன் தாய் தமிழ்செல்வியிடம் கொடுக்க ஏற்பாடு செய்தனர். பணம் வாங்க வந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த வில்லாபுரம் முருகன் (21), மேலஅனுப்பானடி சரவணன் (22), சோலையழகுபுரம் பாலமுருகன் (22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் பாலமுருகன் நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும் பத்தினர், உறவினர்கள் அரசு மருத்துவமனையிலுள்ள ஐஆர்யூசி வார்டு முன் நேற்று திரண்டனர். அவர்கள் பாலமுருகனை பார்க்க முயன்றனர். ஆனால், முடிய வில்லை.

ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவமனையின் எதிரே பனகல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பாலமுருகனின் நிலை குறித்து உடனே அறிவிக்க வலியுறுத்தினர். போலீஸார் சமரசம் செய்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்றும் கூறியதால் கலைந்து சென்றனர்.

இது குறித்து அவரது உறவினர்கள் கூறியது:

கடத்தல் வழக்கில் பாலமுருகனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டு இருப்பது தெரியவந்தது. போலீஸார் தாக்கியதில் அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் மறைக்கிறது. பாலமுருகனின் நிலை பற்றி தெரிவிக்க வேண்டும், என்றனர்.

போலீஸ் தரப்பில் கேட்டபோது, இது தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து எதுவும் கூறமுடியாது, என்றனர்.

SCROLL FOR NEXT