தமிழகம்

இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாட டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை: முதல்வருக்கு பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஈரோடு

இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறையை முதல்வர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல்லில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை மது இல்லாத தீபாவளியாக கொண்டாடுவோம். இந்த தீபாவளிக்கு ஒரு சொட்டு மதுவைகூட பயன்படுத்த மாட்டோம் என வைராக்கியத்தோடு மக்கள் கொண்டாட வேண்டும். இடைத்தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியை கொண்டாடக் கூடிய வகையில், நாளை (இன்று) முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும். ஒரு வழிகாட்டுதலாக இருக்கக்கூடிய வகையில், தமிழக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நாங்குநேரியில் பணம் பட்டுவாடா செய்ததை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்கு தொடர வேண்டும். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறது. இடைத்தேர்தல் வெற்றி அதிமுக - பாஜகவின் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றார்.

SCROLL FOR NEXT