தேனி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் அவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ், முகம்மது சபி ஆகிய 6 பேரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முதன்முதலாக கைதான சென்னை மாணவர் உதித்சூர்யா அவரின் தந்தை டாக்டர் வெங்கடேசன் அளித்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை நீண்டது. இதில் மாணவர் பிரவீன், ராகுல், இர்பான் ஆகியோர் சிக்கினர்.
இவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் அவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ், முகம்மது சபி ஆகிய 6 பேரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதனையொட்டி அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம், அனைவரின் காவலையும் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். 6 பேரையும் மீண்டும் நவம்பர் 8-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.