ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளி யிட மத்திய அரசு முடிவு செய் துள்ளதாக பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
பாஜக-வின் மகா மக்கள் தொடர்பு இயக்க பயிற்சி பட்டறை மாவட்டத் தலைவர் கே.சிவசாமி தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங் கேற்க வந்த இல.கணேசன் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் 46 லட்சம் ஜாதிகள் இருப்ப தாக கணக்கெடுப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனடிப்படை யில், சமூக நீதிப்படி என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என முடிவெடுக்கலாம்.
அடுத்தாண்டு கும்பகோணத் தில் மகாமகம் நடைபெறுவதை யொட்டி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக் கப்பட உள்ளது. நாட்டில் 400 ரயில் நிலையங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. இதில் 27 ரயில் நிலையங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை.
தமிழகம் முழுவதும் இயற்கை வளம் சுரண்டப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. அரசு ஆதரவு டன், அரசுக்குத் தெரிந்தே இது நடைபெறுகிறது. இதனை எதிர்ப்பவர்கள்தான் பலியாகிறார் களே தவிர, தவறிழைப்பவர்கள் தண்டனை அடைவதில்லை என்ற குமுறல் மக்களிடம் உள்ளது என்றார்.