சென்னை
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதற்கு அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கைகள்:
பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்த இடைத்தேர்தலில், 2016-க் குப் பிறகு எதிர்கட்சிகள் வச மிருந்த தொகுதிகளை அதிமுக பறித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பாமக பெருமளவில் பங் களித்திருப்பது மகிழ்ச்சியளிக் கிறது. வன்னிய மக்களுக்கு தாங்கள் தான் இடஒதுக்கீடு கொடுத்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்தார்.
திமுக ஆட்சியில், நான் பல முறை வலியுறுத்தியும் வன்னியர் களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கருணாநிதி மறுத்துவிட்ட நிலை யில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உள் ஒதுக்கீடு வழங் கப்படும் என்று கூறி ஏமாற்ற முயன்றார். அவரது பொய் வணிகத்தை அறிக்கைகள் மூல மாகவும், பிரச்சாரத்தின் வழி யாகவும் அம்பலப்படுத்தினேன். அதன் பயனாக, எந்த மக்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்ற முயன் றாரோ, அந்த மக்களே அவருக்கு படுதோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளனர். இந்த வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், வாக்காளர்களுக்கு நன்றி.
தேமுதிக தலைவர் விஜய காந்த்: முதல்வர் பழனிசாமி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிறந்த முறையில் பிரச் சாரம் செய்த எனக்கும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய காந்துக்கும் நன்றியும், தீபாவளி வாழ்த்துகளும் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
சமக தலைவர் சரத்குமார்: முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசின் நல்லாட்சி தொடர வும், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கான நலத்திட்டங் களை சிறந்த முறையில் செயல் படுத்தவும் எண்ணி, மக்கள் அளித்துள்ள இத் தீர்ப்பை மகிழ்ச் சியுடன் வரவேற்கிறேன். இந்த வெற்றிக்கு வழிவகுத்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அதிமுக ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த சிறப்பான பணி களுக்கு அங்கீகாரமாக இடைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.
மத்திய, மாநில அரசு களின் செயல்பாடுகளில் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்திருக் கிறார்கள் என்பதை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் இந்த வெற்றி மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கைகளில் கூறி உள்ளனர்.
இதற்கிடையே, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், முதல்வர் பழனி சாமியை நேரில் சந்தித்து, இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.