தமிழகம்

நாங்குநேரி இடைத்தேர்தல்: 2-ம் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 3294 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

அ.அருள்தாசன்

நாங்குநேரி

நாங்குநேரி இடைத்தேர்தல் 2-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் முன்னிலை வகிக்கிறார்.

நாங்குநேரியில், கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் இரண்டு சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் 3294 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

இரண்டாம் சுற்றில், அதிமுக வேட்பாளர் நாராயணன் பெற்றுள்ள வாக்குகள் 4938. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 3516 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கன்னியாகுமரி மக்களவை எம்.பி.,யாகத் தேர்வானார்.

இதனையடுத்து காலியான அத்தொகுதியில் அக்.21-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் ஆகியோர் களம் கண்டனர்.

SCROLL FOR NEXT