தமிழகம்

கொடைக்கானலில் ‘ரெட் அலர்ட்' வாபஸ் ஆனதால் சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதி

செய்திப்பிரிவு

கொடைக்கானல்

'ரெட் அலர்ட்' வாபஸ் பெறப் பட்டதையடுத்து கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை பார்வையிட விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கொடைக்கானல் சுற்றுலாப் பகுதி களை பொதுமக்கள் பார்வையிட 2 நாள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்பார்த்தது போல மழை பெய்யாததால் நேற்று முதல் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இருந்தபோதும், ஏற்கெனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கை காரண மாக சுற்றுலாப் பயணிகள் அதிகள வில் வராததால் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் இல்லை.

கொடைக்கானலில் நேற்று பகலில் மேகமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மலைப் பகுதிக ளில், சில நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழை காரணமாக, பல இடங்களில் மழை நீர் அருவி போலக் கொட்டுகிறது. இதனால் மலைச் சாலையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் புதிதாக உருவாகியுள்ள அருவிகளை வாகனத்தை நிறுத்திவிட்டு ஆர்வத் துடன் கண்டு ரசித்து செல்கின்ற னர்.

SCROLL FOR NEXT