தமிழகம்

மழையால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகும் 4,399 இடங்களில் தயார் நிலையில் 40 ஆயிரம் மீட்பாளர்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

வடகிழக்கு பருவமழையால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளா கும் 4 ஆயிரத்து 399 இடங்களில் 40 ஆயிரத்து 377 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், சென்னை எழிலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையால் உடனடியாக பாதிப்புக்கு உள் ளாகக் கூடிய இடங்களாக 4 ஆயி ரத்து 399 இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. அங்கு 9 ஆயிரத்து 163 பெண்கள் உள்ளிட்ட 21 ஆயிரத்து 597 முதல்நிலை மீட்பாளர் கள், கால்நடைகளை பாதுகாக்க 8 ஆயிரத்து 871 முதல்நிலை மீட்பாளர்கள், சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்ற 9 ஆயிரத்து 909 முதல்நிலை மீட்பாளர் கள் என மொத்தம் 40 ஆயிரத்து 377 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மாநிலத்தில் தாழ்வான இடங் களில் வசிக்கும் மக்களைப் பாது காக்கும் பொருட்டு, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 4 ஆயிரத்து 768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2 ஆயிரத்து 394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய நலக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையிடம் பயிற்சி பெற்ற 6 ஆயிரத்து 606 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர். கடலோர மாவட்டங்களில் மட்டும் 4 ஆயிரத்து 155 காவலர்கள் தயாராக உள்ளனர்.

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவை அடைந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் விநாடிக்கு 22 ஆயிரத்து 850 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

எனவே கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங் களில் காவிரி கரையோரம் வசிக் கும் மக்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பல் வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன.

அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல்கள் வழங் கப்பட வேண்டும். காவிரி நதிநீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர்நிலை களில் நீர் வெளியேறும்போது நீச்சல், மீன் பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கை களில் ஈடுபடக்கூடாது. ஆற்றங்கரை யில் நின்று பொதுமக்கள் செல்ஃபி எடுப்பது, வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அணைகளில் இருந்து அதிகப் படியான நீர் வெளியேற்றப்படும் போது காவிரி, கொள்ளிடம், பவானி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.

காவிரி ஆற்றுப்படுகையில் பல்துறை மண்டலக் குழுக்கள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற காவலர்கள், பேரிடர் உதவிப் படைகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முதல்நிலை மீட்பாளர் கள் உள்ளிட்ட அனைத்து மீட்பாளர் களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அவசர காலத்தில் பொது மக்களை வெளியேற்றவும், கால் நடைகளைப் பாதுகாக்கவும், முறிந்து விழும் மரக்கிளைகளை வெட்டி அகற்றவும், நடமாடும் முதல்நிலை மீட்பாளர் குழுக்களை ஏற்படுத்தி, அக்குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் பாம்பு பிடிப்பவர்களையும் தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும். பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் தேவையான குடிநீர், உணவு, சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

காவிரி, கொள்ளிடம், பவானி, அமராவதி ஆகிய ஆறுகளின் கரையோர கிராமங்களில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பி களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுவதைத் தடுக்க தேவையான அளவு மணல் மூட்டைகள் மற்றும் இதர பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தொடர் அறிக்கைகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் டி.ஜெகநாதன் ஆகியோர் உடனி ருந்தனர்.

SCROLL FOR NEXT