சென்னை
அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத் துள்ளார்.
நியூஸ் 7 தொலைக்காட்சி சார்பில் ‘தமிழ் ரத்னா’ விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் சென்னை கலை வாணர் அரங்கில் நடந்தது. இவ்விழா வில், தமிழ் ரத்னா, இசை ரத்னா, நாடக ரத்னா உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்வர் பழனிசாமி விருதுகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
மக்களாட்சியின் மகத்தான 4 தூண் களாக நீதி நிர்வாகம், சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், ஊடகங்கள் ஆகி யவை திகழ்கின்றன. அரசின் அறிவிப்பு களை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிப்பதுடன் ஏழை, எளியோரின் இன்னல்களை அரசுக்கு தெரியப்படுத்த வும், பின்னூட்டம் தரும் செயல்பாடு களை உருவாக்கும் சாதனமாகவும் ஊடகங்கள் செயல்படுகின்றன. அரசு, நிர்வாகம், மக்கள் ஆகியோரை ஒரே புள்ளியில் ஒருங்கிணைக்கின்றன.
நாட்டில் மக்களாட்சி தழைத்தோங்க அரசும், ஊடகங்களும் இரு கண்கள் போல செயல்பட வேண்டும். ஊட கத்தின் மூலம் படிக்காத மக்களும் செய்திகளை கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. ஊடகங்கள் மக் களிடையே விழிப்புணர்வுடன் தாக்கத் தையும் ஏற்படுத்துகின்றன. ஊடகங் களில் ஒளிபரப்பாகும் செய்திகளுக்கு மக்களிடையே அதிக நம்பகத்தன்மை உள்ளதை கருத்தில் கொண்டும், தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண் டும் என்பதை மனதில் வைத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும், உண்மைச் செய்திகளை வெளியிடவும் வேண்டும்.
அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அது எங்கோ மூலையில் பட்டிதொட்டிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவியாக இருக்கும். இந்தச் செய்திகள் மூலம் ஏழை மக் கள் பயன் பெற்றார்கள் என்றால் அதுவே ஊடகங்களுக்குக் கிடைக்கும் உண்மை யான வெற்றியாகும். அதே நேரம் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். செய்திகளை அவசர கதியில் வெளியிடாமல் நன்றாக ஆராய்ந்து, களத்தின் உண்மைத் தன்மையை அறிந்து வெளியிட வேண்டும். அதுவே, ஊடகங்களின் தார்மீகக் கடமையாகும்.
அரசாங்கம் எவ்வளவுதான் சட்டம் இயற்றினாலும், அதற்கு தூண்டுகோலாக தொலைக்காட்சி இருக்க வேண்டும். அப்படி ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, அது அரசுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.