தமிழகம்

பிறந்தநாள் விழாவில் புதிய அணியை உருவாக்க கமல்ஹாசன் முயற்சி: ரஜினி, விஜயகாந்தை அழைக்க முடிவு

செய்திப்பிரிவு

மு.யுவராஜ்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு நவம்பர் 7-ம்தேதி பிறந்த நாளாகும். அன்றைய தினம் அவருடைய தந்தையின் நினைவு தினமும் வருவதால், கொண்டாட்டங்களை தவிர்த்து தந்தையின் சிலையை பரமக்குடியில் கமல்ஹாசன் திறந்துவைக்க உள்ளார். தொடர்ந்து, நவம்பர் 8-ம் தேதிசென்னை நந்தனம் ஒய்எம்சிஏமைதானத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை 2021 சட்டப்பேரவை தேர்தலில் புதிய அணியை உருவாக்குவதற்கான முன்னோட்டமாக பயன்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

மக்களவை தேர்தலின்போதே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைக்க கமல்ஹாசன் முயற்சித்தார். எனவே, அடுத்து வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய அணியை உருவாக்குவதற்கான பணிகளை தற்போதில் இருந்தே அவர் தொடங்கவுள்ளார். ரஜினி,விஜயகாந்த் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

அதனுடைய முன்னோட்ட மாகத்தான் ரஜினிகாந்த், விஜய காந்த் உள்ளிட்டோரையும் விழாவுக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை தவிர,மேற்கு வங்க முதல்வர் மம்தா,டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்உள்ளிட்ட தேசிய தலைவர்களைஅழைக்கவும் திட்டமிடப்பட்டுள் ளது. சினிமாவில் கமல் நடிக்க தொடங்கி 60 ஆண்டை கொண்டாடும் வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு புதிய அணியை உருவாக்குவதற்கு இந்த விழா முன்னோட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றனர்.

SCROLL FOR NEXT