மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சரு மான அமித் ஷா, தனது 55-வதுபிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதை முன்னிட்டு பாஜகவின் பல்வேறு மூத்த நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரும் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெருமை கொள்கிறேன்
முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தங்களின் பிறந்தநாளான, இந்த மகிழ்ச்சித் தருணத்தில் எனது வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
தங்களுக்கு பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும், அமைதியையும் அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில்,‘மகிழ்ச்சியான இந்த தருணத்தில் தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு மேலும் பல்லாண்டு கள் சேவை செய்யும் வகையில் தங்களுக்கு நீண்ட ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை வழங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.