சென்னை
தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. விக்கிரவாண்டியில் 84.36 சதவீதம், நாங்குநேரியில் 66.10 சதவீதம், புதுச்சேரியின் காமராஜ்நகர் தொகுதியில் 69.44 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற் றும் புதுச்சேரியில் காமராஜ்நகர் சட்டப்பேரவை தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கிய நிலையில், சில இடங்களில் மின்னணு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. அது உடனே சரிசெய்யப்பட்டது. மழை பெய்த போதிலும், வாக்காளர்கள் ஆர்வத் தோடு வந்து வாக்களித்தனர்.
பதற்றமானவையாக கருதப் பட்ட 200-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட் டதால், பதற்றமான சூழல் தவிர்க்கப்பட்டது.
நாங்குநேரியில் 66%
சென்னையில் செய்தியாளர் களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று மாலை கூறியதாவது:
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும், நாங்குநேரியில் 66.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2006 தேர்தலில் விக்கிரவாண்டியில் 81.25 சதவீதமும், நாங்குநேரியில் 71.92 சதவீதமும் பதிவானது.
4 சதவீத அளவுக்கே மின்னணு இயந்திரங்கள் பழுது கண்டறியப் பட்டு, அவை உடனடியாக மாற்றப் பட்டன. நாங்குநேரியில் வசந்த குமார் எம்.பி. மீது மக்கள் பிரதி நிதித்துவ சட்டம், இந்திய தண் டனை சட்டப்படி 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில்..
புதுச்சேரியின் காமராஜ்நகர் தொகுதியில் மழையால் காலை யில் மந்தமாக தொடங்கிய வாக்குப் பதிவு படிப்படியாக அதிகரித்தது. இங்கு 69.44 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த ஆண்டை விட 7.95 சதவீதம் குறைவு.
3 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வரும் 24-ம் தேதி வாக்குகள் எண் ணப்பட்டு, அன்று பிற்பகல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.