தமிழகம்

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பின் அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் மகிழ்ச்சி தான்: நடிகர் கருணாஸ் எம்எல்ஏ கருத்து

செய்திப்பிரிவு

திருச்சி

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பின், அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் மகிழ்ச்சி தான் என நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்தார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை நேற்று பார்வையிட்ட பின் அவர் அளித்த பேட்டி:

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை அறிவிக்கவிடாமல் தடுத்து, வயது முதிர்ந்த நடிகர்களுக்கான உதவித் தொகைகளைக்கூட வழங்க முடியாமல் செய்து, ஒட்டுமொத்தமாக நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை முடக்கிய ஐசரி கணேசன், தற்போது தனிப்பட்ட முறையில் சங்க உறுப்பினர்களுக்கு வேட்டி, சேலை கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

முதல்வர் கே.பழனிசாமி தனக்கு சிபாரிசு செய்வதாகவும், கமல்ஹாசன் உடனிருப்பதாகவும் ஐசரி கணேசன் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், நடிகர் சங்க விஷயத்தில் தான் தலையிடவில்லை என முதல்வர் என்னிடம் நேரடியாகவே தெளிவுபடுத்தியுள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் வரக்கூடிய வெற்றி, தோல்வியால் அரசுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. அரசுக்கு எதிராக கருத்து கூறியுள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் நடிகர் விஜய், சகாயம் ஐஏஎஸ் ஆகியோருடன் சேர்ந்து ஒரு கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம்.

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தவுடன் உடன டியாக சென்று சந்திப்பேன். அதிமுகவுக்கு அவர் தலைமை தாங்குவாரா என இப்போது தெரியவில்லை. அதிமுகவுக்கு அவர் தலைமை ஏற்றால் மகிழ்ச்சிதான் என்றார்.நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் வரக்கூடிய வெற்றி, தோல்வியால் அரசுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது

SCROLL FOR NEXT