பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல்: 9 மணி நிலவரம்; 9.66% வாக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜர் நகரில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பதற்றமான 7 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனேஷ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பாக பிரவீணா, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பாக வெற்றிச்செல்வன் உட்பட 9 பேர் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு இன்று (அக்.21) நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் 32 வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பதற்றமான 7 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 35,009. 17,047 ஆண் வாக்காளர்களும், 17,961 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரம் இத்தொகுதியில் அமைந்துள்ள 32 வாக்குச்சாவடிகளிலும் உள்ளன.

தேர்தலுக்காக மொத்தம் 158 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். பாதுகாப்பு அறையைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT