தமிழகம்

7 பேர் விடுதலை விவகாரத்தில் முதல்வர் மவுனம் சாதிக்கிறார்: இரா.முத்தரசன் விமர்சனம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக் காட்டுப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற அரசியல் பயிலரங்க நிறைவு விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது:

ராஜீவ் கொலையில் தண் டனை பெற்ற 7 பேரை விடுவிக்கத் ஆளுநர் மறுத்துவிட்டதாக வரும் செய்திகள் குறித் தும், நீட் தேர்வு குறித்தும் முதல்வர் பழனிசாமி மவுனம் சாதித்து வருகிறார். பேரறிவா ளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க, ராஜீவ்காந்தியின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரி விக்காத நிலையில், சீமான் போன்றவர்களின் கருத்து ஏற்புடையதல்ல.

பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் கடன் கணக்கில் வரவு வைக்கப்படு கிறது. இதைக் கண்டித்து அக். 23-ம் தேதி தஞ்சை, கும்ப கோணம், பட்டுக்கோட்டை யில் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விக்கிரவாண்டி, நாங்கு நேரி இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி பெறும். குடிமராமத்து பணிக ளுக்கு ஒதுக்கிய நிதி, அந்த நிதியில் நடைபெற்ற பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT