சென்னை
ரசாயனங்கள் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று பழக்கடைகளுக்கு கோயம் பேடு சந்தை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல் படி, விதிகளுக்கு உட்பட்டு பழுக்க வைக்க வேண்டும் என்று ஏற் கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கோயம்பேடு சந்தை யில் சில கடைகளில் ரசாயன திரவங்களை தெளித்து, செயற்கை முறையில் துரிதமாக பழுக்க வைக்கப்படுவதாக கோயம்பேடு தலைமை நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத் துள்ளது. இவ்வாறு பழுக்க வைக் கப்பட்ட பழங்களை உண்ணும் போது, நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச் சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நோட்டீஸ் விநியோகம்
அதனால், விதிகளை மீறி ரசாயன பொருட்களை கொண்டு, செயற்கையாக வாழைப் பழங் களை பழுக்க வைத்தால், அந்த கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக் கப்படும். உணவு பாதுகாப்புத்துறை மூலமாக மேல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என கோயம்பேடு சந்தை தலைமை நிர்வாக அலு வலர் எஸ்.கோவிந்தராஜ் எச் சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான நோட்டீஸ் அனைத்து பழக் கடைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சில தினங்களில் அனைத்து கடைகளிலும் சோதனை நடத்த இருப்பதாகவும் கோயம்பேடு சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.