ஈரோடு
பவானி சாகர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகம், புதுச் சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நீர் வரத்து அதிகரித்து பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளி லும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்ப தால், கரையோரங்களில் வசிக் கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் மேட்டூருக்கு பிறகு 2வது பெரிய அணையான பவானி சாகர் வேகமாக நிரம்பி வருகிறது. ஓராண்டுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியுள்ளது.
காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 148 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மொத்த உயரம் 105 அடி. நீர் இருப்பு 28.8 டிஎம்சி. அணையிலிருந்துவிநாடிக்கு 1300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.