தமிழகம்

3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

சென்னை


தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகம், புதுச் சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நீர் வரத்து அதிகரித்து பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளி லும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்ப தால், கரையோரங்களில் வசிக் கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 7,327 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிவாரண மையங்களாக தயார்படுத்தப்பட் டுள்ளன.121 இடங்களில் பன்னோக்கு நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதி, ஜெனரேட்டர் வசதி போன்றவற்றை ஏற்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக 4,393 இடங்கள் அடையாளம் காணப்பட் டுள்ளன. அந்த இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 9 செ.மீ. மழையும், நாகர்கோவிலில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும்.


உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி,கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. கனமழை பெய்யும் இடங்களை ஆரஞ்சு நிறத்தில் குறித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT