தமிழகம்

மின் கம்பத்தை அகற்றாமலேயே போடப்பட்ட தார் சாலை: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்

ராமேஸ்வரம் சல்லி மலைப்பகுதியில் இருந்து பெரியார் நகருக்குச் செல்ல அமைக்கப்பட்டுவரும் தார் சாலை இரண்டு மின் கம்பங்களுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் சுமார் ஆறு இடங்களில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன் பின்பு தற்போது சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சல்லிமலை பகுதியிலிருந்து பெரியார் நகருக்கு தார் சாலை அமைக்கும் பணி பால்ராஜ் என்ற ஒப்பந்தகாரரால் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சாலைகளின் நடுவே ஏற்கனவே மின் கம்பம் இருக்கின்றது, ஆனால் அதனை அகற்றாமல் மின்வாரியத்துக்கு முறையாக தெரிவிக்காமல் மின் கம்பிகளுக்கு நடுவே சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சாலைகளால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே சாலை அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு மின்கம்பிகளை அகற்ற வேண்டும் எனவும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் சாலைகளை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT