திருநெல்வேலி
``அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து தரப்பினரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சிவில் வழக்கு. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்து, முஸ் லிம்கள் இடையே பிரச்சினையை, அரசியல் ரீதியான பிரச்சினையை யாரும் ஏற்படுத்தக் கூடாது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மிகப்பெரிய தவறு. தமிழகத்தில் அதிமுக அரசு பெயரளவில் உள்ளது. மத்திய அரசு சொல்வதை அப்படியே ஏற்கும் அரசாக இருக்கிறது. இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கூறினார்.