சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு தடுப்பு தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அரசு பொது மருத்துவமனையின் டீன் ஜெயந்தி, மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் டெங்குவை ஒழிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். உடன், மருத்துவ கண்காணிப்பாளர் நாராயணசாமி. 
தமிழகம்

டெங்கு பாதித்த நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தகவல் 

செய்திப்பிரிவு

சென்னை

டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்ட நோயாளிகளுக்கு தனிப் பிரிவு ஏற்படுத்தி சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு தடுப்பு தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் டெங்கு காய்ச்சலை வரவழைக்கும் ஏடிஸ் கொசுக்களை பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருந் தனர். மேலும் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், டயர் உள்ளிட்ட பொருட்களையும் வைத்து அவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் அப்புறப் படுத்த வேண்டும் என்ற விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

இதில் கலந்துகொண்ட மருத்துவக் கல்லூரி மாண வர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைத்து தரப்பு ஊழியர் களும் டெங்குவை ஒழிக்க உறுதிமொழி எடுத்துக் கொண் டனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதைத்தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி கூறும்போது, “ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு எதிர்ப்பு தினத்தை கடைப் பிடித்து பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வுள்ளோம். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிப் பிரிவு ஏற்படுத்தி சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT