விபத்தில் உயிரிழந்த இலங்கை அகதி ரவிகாந்த். 
தமிழகம்

மண்டபம் அருகே  வேன் மோதி விபத்து: இலங்கை அகதி பரிதாப மரணம் 

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்

மண்டபம் அருகே நடந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த இலங்கை அகதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இலங்கையில் இருந்து அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் ரவிகாந்த் (44). இவர் ராமநாதபுரத்தில் உள்ள புகைப்பட நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தினமும் இருசக்கர வாகனத்தில் தனது நிறுவனத்துக்கு சென்றுவிட்டு வருவது வழக்கம். இவர் நேற்று பகல் 2 மணியளவில் வழக்கம்போல் ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் அகதிகள் முகாம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மரைக்காயர்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த தனியார் கூரியர் நிறுவன வேன், ரவிகாந்தின் இரு சக்கர வாகனத்தின்மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவிகாந்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சைக்காக செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே அவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. உயிரிழந்த ரவிகாந்தின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் இலங்கையில் வசித்து வருகின்றனர். இவரது தந்தையும், தாயும் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் மதுரை ஆனையூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (45) என்பவரும் யமடைந்தார். அவர் ராமநரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக் குறித்து மண்டபம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சாயல்குடி அருகேயுள்ள தரைக்குடியில் சாயல்குடி-சூரங்குடி இணைப்புச் சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேற்று காலை நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கே.தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த முனியசாமி(55) என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து சாயல்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT