அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் இதுவரை 98 ஆயிரத்து 321 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசி நாளுக்கு முந்தைய தினமான நேற்றைய கலந்தாய்வுக்கு 7 ஆயிரத்து 411 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 2 ஆயிரத்து 963 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வுசெய்த 4 ஆயிரத்து 404 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இதுவரையில் மொத்தம் 98 ஆயிரத்து 321 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். பொது கலந்தாய்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.