தமிழகம்

நாங்குநேரி இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறான முடிவு: கிராம மக்களுக்கு நீதிமன்றம் அறிவுரை

செய்திப்பிரிவு

மதுரை

தஞ்சாவூர் மானம்புசாவடியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ப.ராஜ் குமார் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதியில் 133 கிராமங்களில் வாழும் தேவேந் திரகுல வேளாளர் சமூகத்தினர் தங்களது 7 உட் பிரிவுகளை ஒன்றாகச் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து அரசாணை வெளியிட நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அமைதியான முறையில் ஆட் சேபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இவர்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். எனவே, அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக் கையில் ஈடுபடக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசின் கவனத்தை ஈர்க்க அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற உரிமையுண்டு. அவர்களை போலீ ஸார் அச்சுறுத்தக்கூடாது.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் வாக்குரிமை என்பது மிகப்பெரிய உரிமையாகும். 133 கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வாக்காளர்கள் இடைத்தேர் தலை புறக்கணிக்க முடிவெடுப்பது தவறானது. வாக்காளர்கள் யாரும் தங்களின் வலிமையான வாக்குரி மையை இழக்கக்கூடாது என கூறி வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT