தமிழகம்

காட்பாடி பகுதியில் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 26 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் 

செய்திப்பிரிவு

காட்பாடி 

காட்பாடி பகுதியில் தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து காவல் துறை யினர் கூறும்போது, ‘‘காட்பாடி உட் கோட்டத்தில் கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வந்தது. இதையடுத்து, காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் துரை பாண்டியன் மேற்பார்வையில் காட்பாடி காவல் ஆய்வாளர் புகழ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள், காட்பாடி உட்கோட்டத்துக்கு உட் பட்ட பகுதிகளில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்படி, கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடி அருகே காவல் ஆய்வாளர் புகழ் தலைமையில் நேற்று முன்தினம் வாகன தணிக்கை நடந்தது. அப்போது, சந்தேகத்துக்கிடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வரை பிடித்து விசாரணை நடத்தி னர். விசாரணையில், காட்பாடி பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (37), கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கநேரி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்ப தும் தெரியவந்தது.

காட்பாடியில் திருடப்பட்ட வாகனத்துடன் சென்ற போது காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டது தெரிந்தது.

மேலும், லத்தேரி, காட்பாடி, விருதம்பட்டு உள்ளிட்ட பகுதி களில் கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனங்களை திருடி குறைந்த விலைக்கு விற்றதை ஒப்புக்கொண்டனர்.

இரு சக்கர வாகனத்தை விற்ற பணத்தில் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மது அருந்தி செலவழித்துள்ளனர். சுரேஷ் மீது ஏற்கெனவே வாகன திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

அவர்கள் கூறிய தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 26 இரு சக்கர வாகனங்களை தனிப் படை காவல் துறையினர் நேற்று காலை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங் களின் மதிப்பு சுமார் ரூ. 12 லட்சம் இருக்கும் என்று கூறப்படு கிறது. வாகனங்களின் உரிமை யாளர்கள் யார்? என்று அடை யாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இரு சக்கர வாகன திருட்டு தொடர்பாக இருவர் மீதும் காட்பாடி, லத்தேரி, விருதம்பட்டு காவல் நிலையங்களில் தனித் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT