புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் செம் பாட்டூர் அருகே கீழ முத்துக்காட் டில் நேற்று மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்துகொண்டி ருந்த 4 பெண்கள் உயிரிழந்தனர், மேலும் 25 பேர் காயமடைந்தனர்.
உடையாளிப்பட்டி அருகே உள்ள வைத்தூரில் இருந்து 30 பெண்கள் செம்பாட்டூர் அருகே உள்ள கீழ முத்துக்காடு கிராமத் தில் சாத்தார் என்பவரின் வயலுக்கு நிலக்கடலை அறுவடை வேலைக் குச் சென்றனர். நேற்று விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்ததால், வயலில் தார்ப்பாய் போட்ட தற் காலிக கொட்டகைக்குள் மழைக் காக அனைவரும் ஒதுங்கினர்.
அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் கொட்டகைக்குள் அமர்ந்திருந்த பெண்கள் தூக்கி வீசப்பட்டனர்.
அவர்களில் கொழுதாம்பட்டி யைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி விஜயா(47), வைத்தூரைச் சேர்ந்த எத்திராஜ் மனைவி சாந்தி(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றவர்களை கிராம மக்கள் விரைந்து மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வைத்தூ ரைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி லட்சுமி(60), ராமச்சந்திரன் மனைவி கலைச்செல்வி(45) ஆகியோர் உயிரிழந்தனர்.
காயமடைந்த வைத்தூரைச் சேர்ந்த ச.நாகலட்சுமி(50), என்.சரோஜா(60), எம்.ஜெயலட்சுமி (32), ஆர்.மலர்(35), ஆர்.மீனாள் (35) உள்ளிட்ட 25 பெண்கள் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வெள்ள னூர் போலீஸார் விசாரித்து வருகின் றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி ஆறுதல் கூறினார்.
மற்றொரு சம்பவம்
பெரம்பலூர் மாவட்டம் எறைய சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (50). விவசாயியான இவர், ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடு பட்டு வந்தார். நேற்று மாலை எறை யசமுத்திரம் கிராமத்திலிருந்து அய்யலூர் செல்லும் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் உடல் கருகி அந்த இடத்திலேயே வேலு உயிரிழந்தார். இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர்