சென்னை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீபாவளிக்கு முன்னதாக தினசரி குடிநீர் விநியோகத்தை 600 மில்லியன் லிட்டராக உயர்த்த சென்னைக் குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை யில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டிருப்பதால், சென்னையில் தட்டுப் பாடின்றி தண்ணீர் விநியோகிக்க சென்னைக் குடிநீர் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
மொத்த கொள்ளளவு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி. கிருஷ்ணா நீர் வரத்தாலும், அவ்வப்போது பெய்த மழையாலும் ஏரிகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 4 ஏரிகளிலும் 1,191 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. விரைவில் ஏரிகளின் நீர் இருப்பு 2 டிஎம்சி-யை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
600 மில்லியன் லிட்டர்
இந்நிலையில், ‘‘பூண்டிக்கு வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நதிநீர், புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு 1,000 மில்லியன் கன அடி நீர் வந்துவிட்டால், சென்னையின் தினசரி குடிநீர் விநியோகத்தை 525 மில்லியன் லிட்டரில் இருந்து 600 மில்லியன் லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்பிறகே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து வாடகைக்கு தண்ணீர் எடுப்பது நிறுத்தப் படும்’’ என்று சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பர் 25-ம் தேதி சென்னைக் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இத்தண்ணீர் பூண்டி ஏரியை 28-ம் தேதி வந்தடைந்தது. அன்றுமுதல் நேற்று வரை (அக்.14) சுமார் 930 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
தற்போது விநாடிக்கு 500 மில்லியன் கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக் கிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 0.7 மில்லியன் கனஅடிதான் கிருஷ்ணா நதி நீர் வந்து கொண் டிருக்கிறது.
வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லி யன் லிட்டர், திரு வள்ளூர் மாவட்ட விவசாயக் கிணறு களில் இருந்து 120 மில்லியன் லிட்டர், கடல்நீரைக் குடி நீராக்கும் 2 நிலை யங்களில் இருந்து 180 மில்லியன் லிட் டர், சென்னைக் குடி நீர் வாரியத்துக்கு சொந்தமான கிணறுகளில் இருந்து 30 மில் லியன் லிட்டர், ரெட்டேரி மற்றும் எருமை யூர் கல் குவாரியில் இருந்து 15 மில்லி யன் லிட்டர் என ஆக மொத்தம் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னையில் விநியோகிக்கப்படுகிறது .
இவ்வாறு சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்தார்.