சென்னை
தமிழகத்தில் 3 புதிய ரயில்களின் சேவையை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டின் சிறிய நகரங்களை ரயில் சேவை மூலம் இணைக்கும் வகையில் 10 பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக, தேர்வு செய்யப் பட்ட 10 வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ரயில்வே அமைச் சர் பியூஸ் கோயல் இன்று டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 10 பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதில், ரயில்வே இணை அமைச் சர் சுரேஷ் அன்காடி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
அந்த வகையில் தமிழகத்தில் சேலம் - கரூர், பழநி - கோயம் புத்தூர், பொள்ளாச்சி - கோயம் புத்தூர் இடையே 3 புதிய ரயில் களின் சேவை தொடங்கப்படு கின்றன.
அதன்படி, சேலம் - கரூர் (76801/ 76802) இடையே வாரம் 6 நாட்களுக்கு (ஞாயிறு தவிர) மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில் 3.25 மணிக்கு சென்றடையும். இதேபோல், கரூரில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு சேலம் செல்லும்.
கோயம்புத்தூர் - பழநி (56609/ 56608) இடையே தினமும் மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 4.40 மணிக்கு பழநி செல்லும். இதேபோல், பழநியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10-க்கு கோயம்புத்தூர் செல்லும்.
பொள்ளாச்சி - கோயம்புத்தூர் (56184/ 56183) இடையே வாரம் 6 நாட்களுக்கு (ஞாயிறு தவிர) காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.40 மணிக்கு கோயம் புத்தூர் செல்லும். கோயம்புத் தூரில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு பொள்ளாச்சிக்கு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.