தமிழகம்

காவலர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்க உயர் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் காவல் ஆணையர் ஆஜராக வேண்டும்: ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

காவல் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் சென்னை காவல் ஆணையர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலர்களின் நலன் மற்றும் குறைதீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும், காவல் ஆணையம் அமைக்கக்கோரி யும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்தஉச்ச நீதிமன்றம், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களில் காவல்துறையினருக்கான சீர்திருத்த ஆணையத்தை அமைப்பது தொடர்பான தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது

அதன்படி, இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி மற்றும் நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டிசார்பில் தற்போது தமிழகத்தில் காவல் சீர்திருத்தச் சட்டத் தின் பிரகாரம் 4-வது காவல் ஆணையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘காவலர்களின் குறைகளைக்களையவும், அவர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கவும் காவல் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அதற்காக உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

எனவே இதுதொடர் பாக தமிழக அரசு உரியஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உத
வும் வகையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் வரும் டிச.18 அன்று நேரில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT