தமிழகம்

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தாமதமாகும் புவிசார் குறியீடு

செய்திப்பிரிவு

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறி யீடு வழங்க, மத்திய, மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ள னர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் கரிசல் மண் பூமி என்ப தால், இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு தனி ருசி உண்டு. இயற்கையிலேயே இனிப்புச் சுவை கொண்ட இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள் சுவையில் உலகப் பிரசித்தி பெற்றவை.

நிலக்கடலைகளை வறுத்து, அதன் தோலை நீக்கிய பின்னர், கம்பி பதத்துக்கு வரும் வெல்லப் பாகுடன் கலந்து, சப்பாத்தி தயார் செய்வதுபோல் தட்டையாக்கி, தேவைக்கேற்ப மிட்டாய்களாக வெட்டி எடுக்கின்றனர். இந்த கடலை மிட்டாய்கள் வெளிநாடு களுக்கும், இந்தியா முழுமைக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

புவிசார் குறியீடு

கோவில்பட்டி மண்ணுக்கே உரித்தான கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்காததால், தமிழகத்தில் பிற பகுதிகளில் கடலை மிட்டாய் தயாரிப்பவர்களும், தர மற்ற வகையில் தயாரித்து ‘கோவில் பட்டி கடலை மிட்டாய்’ என்ற பெயரை பயன்படுத்துகின்றனர். இதனால், உண்மையான கோவில் பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி யாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர் மற் றும் விற்பனையாளர் நலச்சங்க செயலாளர் கே.கண்ணன் கூறிய தாவது: கடலை மிட்டாய்க்கு புவி சார் குறியீடு பெற 2014-ல் விண்ணப்பித்தோம். அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ப.சஞ்சய்காந்தி, இதற் கான முயற்சிகளை எடுத்து வரு கிறார். புவிசார் குறியீடு கிடைத்தால் கோவில்பட்டியை தவிர வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் `கோவில் பட்டி கடலை மிட்டாய்’ என்ற பெயரை பயன்படுத்த முடியாது’’ என்றார்.

ஆதாரம் இருந்தால் தரலாம்

இதுகுறித்து ப.சஞ்சய்காந்தி கூறும் போது, “கோவில்பட்டி கடலை மிட்டாய் குறித்த விண்ணப்பம் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. கடலை மிட்டாயின் பூர் வீகம் கோவில்பட்டிதான் என்ப தற்கு உரிய ஆதாரம் கேட்கின் றனர். அதனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதுதொடர்பாக ஆதாரம் வைத்துள்ளவர்கள் தொடர்பு கொண்டு வழங்கினால் புவிசார் குறியீடு பெற பயனுள்ளதாக அமையும்” என்றார்.

SCROLL FOR NEXT