தமிழகம்

பாடகர் எஸ்பிபியை முகம்சுளிக்க வைத்த மதுரை காந்தி மியூசிய வளாக கழிப்பறை

கி.மகாராஜன்

மதுரை

மதுரையில் இந்நிசை நிகழ்ச்சிக்காக வந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி, நிகழ்ச்சி நடைபெற்ற காந்தி அருங்காட்சியக வளாக கழிப்பறை சுகாதாரமற்று இருப்பது குறித்து வேதனை தெரிவித்திருக்கிறார்.

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் சுகாதாரம் தொடர்பாக பேசாமல் இருப்பதில்லை. இரு நாட்களுக்கு முன்பு மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

இடையே அவர் பேசும்போது, "சீன அதிபர், இந்திய பிரதமரின் சந்திப்பால் சென்னை சுத்தமாகியுள்ளது. இந்த சுத்தம் எப்போதும் இருக்க வேண்டும்.

மகாத்மாவின் 150-வது பிறந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த வேளையில் மியூசிய வளாகத்தில் பாடுவது பெருமை தருகிறது. அதே நேரத்தில் மேடைக்கு பின்னால் உள்ள கழிப்பறை சுகாதாரமற்று, அருவருக்க வைப்பதாக இருப்பது வேதனை தருகிறது.

மகாத்மாவின் பெருமையைப் பறைசாற்றும் மியூசியம் சுகாதார சீர்கேடாக இருப்பது வருத்தம் தருகிறது. இந்த விஷயத்தை பொறுப்பாளர்கள் கவனிக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT