தமிழகம்

அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,200 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக கேரளா பயணம்: விண்வெளி அறிவியல் தொடர்பான பயிற்சி அளிக்கவும் கல்வித் துறை திட்டம்

செய்திப்பிரிவு

சி.பிரதாப்

சென்னை

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 1,200 பேர் கேரளாவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். சுற்றுலா வில் ஆசிரியர்களுக்கு விண் வெளி அறிவியல் தொடர்பான பயிற்சி அளிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கற்றல், கற்பித் தல் பணிகளை மேம்படுத்த பல்வேறு விதமான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் ஆசிரியர் கள் பாடம் நடத்தும் திட்டம் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு களில் நடைமுறைக்கு வரவுள் ளது. இதற்காக அரசுப்பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட் டன. மேலும், மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சி யாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 1,200 பேர் தற்போது கேரளா வுக்கு கல்விச் சுற்றுலா அழைத் துச் செல்லப்பட உள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறிய தாவது:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளி களில் பணிபுரியும் கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 6 பட்டதாரி மற்றும் 4 முதுநிலை ஆசிரியர் கள் என 10 பேர் வீதம் மொத்தமுள்ள 120 கல்வி மாவட் டங்களுக்கு 1,200 பேர் தேர் வாகியுள்ளனர். அதன்படி ஆசிரி யர்கள் கேரளாவின் திருவனந்த புரம் மாவட்டத்துக்கு கல்விச் சுற்றுலா செல்கின்றனர்.

மொத்தம் 4 நாட்கள் வரை யான சுற்றுலாவில் தேசிய விண்வெளி ஆய்வு மையம், கணித தொழில்நுட்ப நிறுவனங் கள் மற்றும் அருட்காட்சி யகங்கள் ஆகிய இடங்களுக்கு ஆசிரியர்கள் நேரடியாக களப் பயணம் மேற்கொள்வார்கள். மேலும், விண்வெளி ஆய்வு தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் வல்லுநர் குழு வால் ஆசிரியர்களுக்கு வழங் கப்பட உள்ளது.

இதன்மூலம் விண் வெளி அறிவியல் ஆர்வம் மாணவர்களிடம் ஊக்குவிக்கப் படும். ஆசிரியர்கள் பயிற்சி யில் பெற்ற அனுபவம் மாண வர்களுக்கு சிறப்பான முறை யில் கற்பித்தல் பணியை மேற்கொள்ள உதவும். மேலும், அறிவியல் செய்முறை கல்விக்கான முக்கியத்துவம் உயர வழிவகுக்கும்.

இதுதவிர விண்வெளி ஆராய்ச்சி குறித்த மாணவர் களின் சிறந்த கேள்விகளை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டு விஞ்ஞானிகளிடம் விளக்கம் பெற்று தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கல்விச் சுற்றுலா பயணம் மத் திய ரயில்வே துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆசிரியர்கள் அனை வரும் ரயில் மூலமாகவே சுற்றுலா அழைத்து செல்லப்படு வர்.

இதற்காக ஒரு ஆசிரி யருக்கு ரூ.2,000 என கணக் கிட்டு மொத்தம் ரூ.24 லட் சம் பயண நிதியாக ஒதுக்கப் பட்டுள்ளது. இதேபோல், இதர பாடங்களின் ஆசிரியர்களை யும் அவர்களின் பாடங்கள் சார்ந்த வரலாற்று இடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற் சாலைகளுக்கு விரைவில் கல் விச்சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன.

இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT