அர்ஜுனன் தபசு சிற்பம் முன்பு ஏற்பட்ட வாகன நெரிசல். ( 
தமிழகம்

மோடி, ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்- அர்ஜுனன் தபசு சிற்பம் அருகே வாகன நெரிசல்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்

மோடி, ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு, மாமல்லபுரத்தில் கலைச் சின்னங்களை பொதுமக்கள் பார்க்க தொல்லியல் துறை மீண்டும் அனுமதி வழங்கியதால் நேற்று குடுஅர்ஜுனன் தபசு சிற்பம் முன்பு ஏற்பட்ட வாகன நெரிசல். (ம்பம், குடும்பமாய் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்காக மாமல்லபுரத்தில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இதில், சாலை கள் சீரமைப்பு, குடிநீர் வசதி, சிற்ப வளாகங்களில் அழகுச் செடிகள், நடைபாதை சீரமைப்பு, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம், சாலை நடுவே அலங்கார செடிகள் அமைப்பு போன்ற பணிகள் நடை பெற்றன. இதனால், மாமல்லபுரம் புதுப்பொலிவு பெற்றது. எனினும், தலைவர்களின் வருகையால் அக்.8-ம் தேதி முதல் சுற்றுலா தலங் களை பார்வையிட சுற்றுலாப் பயணி களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை நேற்றுமுதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால், மாமல்லபுரத்தில் வழக்கத்தைவிட அதிக அளவில் குடும்பம், குடும்ப மாக சுற்றுலா பயணிகள் திரண்ட னர். வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் புதிதாக அமைக் கப்பட்ட புல்தரை மீது குடும்பத் துடன் அமர்ந்து ரசித்தனர். அர்ஜுன் தபசு சிற்பத்தின் முன்பு அதிக அளவில் மக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை கட்டுப்படுத்த போதிய போலீஸார் இல்லாததால், அர்ஜுனன் தபசு பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. கடற்கரை கோயில் வளா கத்தில் இரு தலைவர்களுக்காக அமைக்கப்பட்ட மேடைகள் மற்றும் அலங்கார மின்விளக்குகளை அகற் றும் பணிகள் நடைபெற்று வருவ தால், சுற்றுலா பயணிகளுக்கு அவை இடையூறாக இருந்தன.

இதுகுறித்து, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கூறும்போது, “இரு தலைவர்களின் வருகைக்காக பொலிவூட்டப்பட்ட மாமல்லபுரத்தைக் காண்பதற் காகவே உள்ளூரில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இனி வரும் நாட்களில்தான், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என கருதுகிறோம். மாமல்லபுரம் நகரத்தை தற்போ துள்ளதைப் போன்றே, தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது” என்றனர்.

தொல்லியல் துறை வட்டாரங் கள் கூறும்போது, “பொதுமக்கள் கூறுவது ஏற்புடையதுதான். கலைச் சின்ன வளாகங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புல்தரையை, சுற்றுலாப் பயணிகள் நாசப்படுத்தி வருகின்றனர். பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே முறையாக பராமரிக்க முடியும்” என்றனர்.

SCROLL FOR NEXT