சென்னை
சீன அதிபருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டு சீன அதிகாரிகள் ஆச்சரியப்பட்ட தாக காவல் இணை ஆணையர் ஆர்.சுதாகர் பெருமிதம் தெரிவித் துள்ளார். சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீன அதிபரின் சென்னை, மாமல்லபுரம் பயணத்தால் சென் னையில், பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர் பணியால் போலீஸாருக்கும் பணிச்சுமை ஏற்பட்டது. இருப் பினும் சிறப்பான முறையில் சீன அதிபருக்கான பாதுகாப்பு ஏற்பாடு களை சென்னை போலீஸார் செய்திருந்தனர்.
இந்நிலையில் சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சீன அதிபருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் ஆர்.சுதாகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமீபகாலங்களில் எந்த ஒரு மிகப் பெரிய தலைவரும் தமிழகத்தில், இந்த அளவு தூரத்தை சாலை வழியாகக் கடந்தது கிடையாது. எனவே அதற்கு ஏற்ப நாங்கள் பாதுகாப்பு வழங்குவது சவாலான விஷயமாக இருந்தது. மொத்தம் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீன அதிபரைச் சுற்றி மட்டும் 5 ஆயிரம் போலீஸார் நின்றிருந்தனர்.
ஒரு மாதம் முன்பே குழு
இதுபோக ஊர்க்காவல் படை யினர் 1,000 பேர் பணியில் ஈடுபடுத் தப்பட்டனர். சீன அதிபருக்கான பாதுகாப்புக்காக 110 எஸ்.ஐ.கள் தலைமையில் 200 பேர் கொண்ட தனித்தனி குழுவை ஒரு மாதத்துக்கு முன்பே அமைத்தோம்.
சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 35 கி.மீ. தூரத்துக்கு தீவிர ஆய்வுகளை செய்திருந்தோம். ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் இந்தக் குழு தீவிரமாக ஆய்வு செய்தது. ஒவ்வொரு குழுவுக்கும் சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு ஆய்வு செய்வதற்கு இலக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு முன்பாக சீன அதிபர் வருகை தந்தபோது எந்த விதமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன என்பது தொடர்பாக ஆய்வு நடத்தினோம். அந்த வீடியோக்களை பார்த்து அந்த வீடியோ தகவல்களை அனைத்து காவல் துறையினருக்கும் அனுப்பி வைத்தோம்.
சமூக வலைதளங்கள்
இது போன்ற போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு எந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு செய்தோம். வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்தோம்.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளையும் கண்காணித்து இதன் மூலமாக எந்த விதமான போராட்டங்கள் அல்லது ஆபத்து வரக்கூடும் என்பதை ஊகித்தோம். கிருஷ்ணகிரி வாகன சோதனைச்சாவடி முதலே சோத னைகளைத் தொடங்கி விட்டோம்.
சென்னைக்கு வரும் ரயில், பேருந்து, விமானங்களில் பயணிக்க யாராவது மொத்தமாக முன்பதிவு செய்துள்ளார்களா? என கண் காணித்தோம். மெட்ரோ ரயிலில் பயணித்தும் பயணிகளோடு பயணி களாக கவனித்தோம்.
3 மட்டத்தில் சீன அதிகாரிகள், நமது காவல்துறையினருடன் சந் திப்பு நடத்தினர். 3-வது குழுவில் மிகவும் சீனியர் அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களிடம் உள்ள உளவுத் துறை தகவல்களை வைத்து, தேவைப்படும் பாது காப்பு ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொண்டனர். ஆனால் நாங்கள் ஏற்கெனவே அதை செய்துவிட்டோம் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டனர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள் என அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். எதிர்பார்த்ததைவிட சென்னை மக்கள் அதிக அளவு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கு நன்றி. சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.சமீபகாலங்களில் எந்த ஒரு மிகப் பெரிய தலைவரும் தமிழகத்தில், இந்த அளவு தூரத்தை சாலை வழியாகக் கடந்தது கிடையாது. எனவே அதற்கு ஏற்ப நாங்கள் பாதுகாப்பு வழங்குவது சவாலான விஷயமாக இருந்தது.