ஒய். ஆண்டனி செல்வராஜ்
மதுரை
இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு, மாமல்லபுரம் மற்றும் கோவளம் கடற்கரை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அதனால், உலக சுற்றுலா சந்தையில் மாமல்லபுரம் மூலம் தமிழகத்துக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவுடன் எப்போதுமே கடினமான போக்கை கையாளும் சீனாவின் அணுகுமுறை, கடந்த காலத்தில் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. தற்போது அந்த கசப்புகளை எல்லாம் மறந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி யும், சீன அதிபர் ஜி ஜின்பிங் கும் நேற்று முன்தினம் சென் னையை அடுத்த, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புராதன நகர மான மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உலக அளவில் மக்கள் தொகையில் முதல் 2 இடங் களை பிடித்துள்ள இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்ட தால் அவர்களின் இந்த சந்திப்பையும், அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய மாமல்ல புரம் நகரத்தையும் உலக நாடுகளே உற்றுநோக்கின.
உலக மக்களின் கவனம் அனைத்தும் கடந்த 2 தினங்க ளாக தமிழகத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் பக்கம் திரும்பியிருந் தது. பல்லவர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட இங்குள்ள குடை வரைக் கோயில்கள், ஒற்றைக் கல் ரதம் போன்ற அற்புதமான சிற்பங் களுக்குப் பெயர்போன மாமல்ல புரம், தமிழகத்தின் மிக முக்கிய மான சுற்றுலாத் தலமாக கருதப் படுகிறது.
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மாமல்லபுரத்தின் சிற்பங் களும், வரலாற்று சிறப்புகளும் பார்க்க பிரமிப்பாகவும் இருப் பதால், இதை உலகப் பண் பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. வெளி மாநில மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தந்தாலும் இதுவரை மாமல்லபுரம் உலக அளவில் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. தற்போது இந்திய பிரதமரும், சீன அதிபரும் சந்தித்துக் கொண்ட பிறகு மாமல்லபுரம் சர்வதேச அளவில் தேடும் பொருளாகி உள்ளது.
சந்திப்புக்கான முக்கியத்துவம் மறைந்து தற்போது மாமல்ல புரத்தில் அப்படி என்னதான் இருக் கிறது, அதன் சுற்றுலா விசேஷம் என்ன என்று சர்வதேச கவ னத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2 நாட்களில் இணையதளத்தில் லட் சக்கணக்கானோர் மாமல்லபுரம் மற்றும் கோவளம் கடற்கரை குறித்து தேடுதலில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
பல்லவர்களின் வர்த்தக மைய மாகச் செயல்பட்ட மாமல்லபுரத்தில் சீனர்களுக்கு வரலாற்றுத் தொடர்பு இருப்பதால் மாமல்லபுரத்தில் சீன அதிபர், மோடி சந்திப்பு நடை பெற்றதாகக் கூறப்படுகிறது. தற் போது மாமல்லபுரத்துக்கு சர்வ தேச அளவில் கிடைத்துள்ள முக்கியத்துவத்தை பயன்படுத்தி தமிழக அரசு மாமல்லபுரம் நகரில் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் சாலை கட்டமைப்பு வசதிகளை சர்வதேச அளவில் மேம்படுத்தி உலக சுற்றுலா சந்தையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2 நாட்களில் மேற் கொண்ட துரிதமான நடவடிக்கை களை அப்படியே தொடர்ந்தால் மாமல்லபுரம் உலக அளவில் சுற் றுலா வருவோர்களை கவரும் பட்டியலில் முதல் இடத்தில் வந் தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பயணிகள் வருகை அதிகரிக்கும்
இதுகுறித்து மதுரை சுற்றுலா ‘ட்ராவல் கிளப்’ தலைவர் சித்ரா கூறும்போது, ‘‘தமிழகத்துக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 100 சதவீதம் கண்டிப்பாக மாமல்லபுரம் செல்வார்கள். ஆனால், தமிழகத்தில் மாமல்ல புரம் என்று ஓர் இடம் இருப் பது உலகத்தில் உள்ள பல சுற்று லாப் பயணிகளுக்கு தெரியாது. தற்போது உலகமே மாமல்ல புரத்தை பற்றி பேசுகிறது. மாமல்ல புரம் மூலம் தமிழக சுற்றுலாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டிங் சர்வ தேச அளவில் கிடைத்துள்ளது. பணம் முதலீடு செய்து விளம்பரம் செய்து இருந்தால்கூட இவ்வளவு பெரிய விளம்பரம் கிடைத்து இருக்காது. இந்தியா, தன்னுடைய சுற்றுலா சந்தையில் சீனர்களை ஈர்க்க நீண்ட காலமாகவே திட்ட மிட்டு வந்தது. தற்போது அந்த திட்டமும் தானாகவே நிறைவேறி உள்ளது’’ என்றார்.