திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் பயிற்சி மையங்களில் வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனைகள் பற்றி மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
சிதைந்த நீட் தேர்வு முறையால், மருத்துவக் கல்வி பயில ஆர்வமுடைய மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில், ஊழல் மற்றும் வரி ஏய்ப்புச் செய்பவர்கள் நீட் மூலம் சட்டவிரோத இலாபம் ஈட்டுகின்றனர்.
பணக்காரர்கள் மட்டுமே நீட் தேர்வுக்குத் தயாராக முடியும் என்பதை வருமானவரித் துறைச் சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளதோடு, நீட் தேர்வு, ஏழைகளுக்கு எதிரானது என்ற நமது கூற்றை, இச்சோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.