தமிழகம்

நெல்லையில் வெளுத்துவாங்கிய மழை: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

அ.அருள்தாசன்

நெல்லை

திருநெல்வேலி நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி இரண்டாவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) மழை பெய்து வருகிறது. இதனால் நகரமே குளிர்ந்து மக்களை மகிழ்வித்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை கனமழை பெய்தது. பாளையங்கோட்டையிலும் மார்க்கெட், பேருந்துநிலையம், ஹைகிரவுண்ட் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

இன்றைய காலை நிலவரப்படி, பாபநாசம்: 9 மி.மீ, , சேர்வலாறு: 9 மி.மீ, மணிமுத்தாறு: 11.8 மி.மீ, ராமா நதி: 6 மி.மீ, குண்டாறு: 7 மி.மீ, அம்பாசமுத்திரம்: 3.60 மி.மீ, ஆய்குடி: 10 மி.மீ, நாங்குநேரி: 5 மி.மீ, ராதாபுரம்: 4 மி.மீ, செங்கோட்டை: 3 மி.மீ, தென்காசி: 7 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.

மழை காரணமாக அணைகளில் நீர்மட்ட அதிகரித்துள்ளது.

அணைகளில் இன்றைய காலை நிலவரப்படி நீர்மட்டம்:

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 105.95 அடி. நீர் வரத்து : 349.88 கன அடி; வெளியேற்றம் : 354.75 கன அடி .

சேர்வலாறு : உச்ச நீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 118.50 அடி . நீர்வரத்து : இல்லை; வெளியேற்றம் : இல்லை.

மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடி. நீர் இருப்பு : 42.85 அடி. நீர் வரத்து : 43 கன அடி. வெளியேற்றம் : இல்லை.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நேற்றும் இன்றும் மழை பெய்து வருகிறது.

SCROLL FOR NEXT