தமிழகம்

ஆலங்குடி கோயிலில் குருப் பெயர்ச்சி வழிபாடு: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி யில் ஆபத்சகாயேஸ்வரர் கோயி லில் உள்ள குரு பகவான் சன்னதியில் குருப் பெயர்ச்சி விழா இன்று நடைபெற உள்ளதை யொட்டி பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற் றொரு ராசிக்கு பெயர்ச்சி அடை கிறார். இந்த ஆண்டு கடக ராசி யிலிருந்து சிம்ம ராசிக்கு இன்று இரவு 11.02 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பகவான் பரிகாரத் தலமாக விளங்குகிறது. பழமையானதும், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் விளங்கும் இக்கோயிலில் உள்ள குரு பகவானுக்கு இன்று சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

இன்று நடைபெறவுள்ள குருப் பெயர்ச்சியையொட்டி ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச் சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டால் நற்பலன்களைப் பெறலாம் என ஜோதிடர்கள் தெரி விக்கின்றனர்.

குருப் பெயர்ச்சி விழாவில் பங்கேற்று குரு பகவானை தரிசிக்க தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஆலங்குடி கோயிலுக்கு வருவார்கள் என் பதால் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன் உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

மேலும், திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஆலங்குடிக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கு வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன் உத்தரவின்பேரில் பாபநாசம் டி.எஸ்.பி. செல்வ ராஜ் தலைமையில் 500-க்கும் மேற் பட்ட போலீஸார், ஆலங்குடி யில் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். கோயிலில் பல்வேறு இடங்களில் கண்காணிப் புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. காவல் துறை சார்பில் கட்டுப் பாட்டு அறையும் அமைக்கப் பட்டுள்ளது. அவசர கால தேவைக் காக ஆம்புலன்ஸ் வாகனம், மருத் துவர்கள் குழு, தீயணைப்பு வாகனம் ஆகியவை தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரா.சாத் தையா தலைமையில் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT