தமிழகம்

இன்று பிற்பகல் சென்னை வருகிறார் சீன அதிபர்: 2 நாள் பயணம் குறித்த முழு விவரம்

செய்திப்பிரிவு

சென்னை

மாமல்லபுரத்தில் பிரதமருடனான 2 நாள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொள்ள சீன அதிபர் இன்று பிற்பகல் சென்னை வருகிறார்.

சென்னை வரும் சீன அதிபரை வரவேற்க பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

பின்னர் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளம் தாஜ் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார்.
சீன அதிபர் பயண விவரம்:

பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

பிற்பகல் 1.45 மணிக்கு சாலை மார்க்கமாக சென்னை ஐடிசி சோழா ஓட்டலுக்குப் புறப்படுகிறார்.

பிற்பகல் 1.55 மணிக்கு சென்னை ஐடிசி சோழா ஓட்டலைச் சென்றடைகிறார்.

மாலை 4 மணி வரை அங்கு தங்குகிறார்.

மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார்

மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் சென்றடைகிறார்

மாலை 5 மணி முதல் 6 மணி வரை

பிரதமருடன் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக்கோயிலைப் பார்வையிடுகிறார்

மாலை 6 மணி முதல் 6.30 வரை கலாச்சார நிகழ்ச்சி கடற்கரைக் கோயில் வளாகத்தில்.

மாலை 6.30 மணி முதல் 6.45 வரை அறையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

மாலை 6.45 மணி முதல் இரவு 8 மணிவரை பிரதமருடன் தனிப்பட்ட முறையில் இரவு விருந்து கடற்கரைக் கோயில்.

இரவு 8.05 மணிக்கு மாமல்லபுரத்திலிருந்து ஐடிசி சோழா ஓட்டலுக்கு சாலை மார்க்கமாக கிளம்புகிறார்
இரவு 9 மணிக்கு கிண்டி ஐடிசி சோழா ஓட்டலுக்குத் திரும்புகிறார்.

இரவு ஓய்வு.

12/10 சனிக்கிழமை நிகழ்ச்சி

காலை 9. 05 மணிக்கு பிரதமர் மோடி தங்கியுள்ள கோவளம் ரிசார்ட்டுக்கு சாலை மார்க்கம் வழியாக புறப்படுதல்.

காலை 9.55 மணிக்கு கோவளம் ரிசார்ட் சென்றடைதல்.

காலை 9.50 - 10 மணிக்கு ஹோட்டலில் மக்கான் என்ற இடத்தை நோக்கிப் பயணம்.

காலை 10 மணியிலிருந்து 10.40 வரை மக்கான் பகுதியில் பிரதமருடன் தனிப்பட்ட சந்திப்பு.

காலை 10.50 மணி முதல் 11.45 வரை டாங்கோ ஹாலில் முக்கியப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு.

காலை 11.45 மணி முதல் 12.45 மணி வரை மதிய உணவு ( காஸ்வான்னியா ஹால்).

பிற்பகல் 12.45 மணி சென்னை விமான நிலையத்துக்கு சாலை மார்க்கம் வழியாக புறப்பாடு.

பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை.

பிற்பகல் 1.25 மணி முதல் 1.30 வரை முக்கியப் பிரமுகர்களை வழியனுப்பும் விழா

பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து நேபாளம் நோக்கிப் பயணம்.

மேற்கண்ட பயண நிகழ்ச்சிகள் கால நேரம் மாறுதலுக்குட்பட்டது. சென்னை நோக்கி சீன அதிபர் 40 நிமிடம் தாமதமாக வருவதாக ஏஜென்சி தகவல் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT