நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர். 
தமிழகம்

புதிய தமிழகம் கட்சி கொடிகளை பயன்படுத்த எதிர்ப்பு: வாக்கு சேகரிக்க முடியாமல் அமைச்சர் திரும்பினார்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி யில் அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் வாக்கு சேகரித்தபோது, புதிய தமிழக ம் கட்சியின் தலைவர் படம் மற்றும் கொடிகளை பயன்படுத் துவதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்குசேகரிக்க முடியாமல் அமைச்சரும், அதிமுகவின ரும் பாதியில் திரும்பினர்.

`தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றி ணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண் டும்’ என்ற கோரிக்கையை வலி யுறுத்தி, மத்திய, மாநில அரசு களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் நகர், கடம்பன் குளம், உன்னங்குளம், ஆயர் குளம், இளையார் குளம் உள் ளிட்ட 20 கிராமங்களில் தேர் தலை புறக்கணிப்பதாக அப் பகுதி மக்கள் அறிவித்துள்ள னர். இதற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

`புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் படம், அவரது கொடி, சின்னங் களை, தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பயன்படுத்தக் கூடாது’ என தேர்தல் அலுவலரிடம், புதிய தமிழகம் கட்சியின் வழக் கறிஞர் அணி பிரிவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவினரின் பிரச் சார வாகனங்களில் புதிய தமிழகம் கட்சியின் கொடிகளை யும், படங்களையும் பயன் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரி வித்து காவல் நிலையங்களில் புதிய தமிழகம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக் கரைப்பட்டி பகுதியில் அமைச் சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் நேற்று வாக்கு சேகரித்தனர். மூலைக்கரைப்பட்டி பேருந்து நிலையத்தில் அமைச்சர் வந்த ஜீப்பை, புதிய தமிழகம் கட்சியி னர் வழிமறித்தனர். `அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி விலகிவிட்டது. எனவே, அக்கட்சித் தலைவர் படம் மற்றும் கொடிகளை பயன் படுத்தக் கூடாது’ என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த காவல்துறை யினர் புதிய தமிழகம் கட்சி யினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் கட்சி கொடி கள், படங்களுடன் அமைச்சர் பிரச்சாரம் செய்தால் மறியலில் ஈடுபடுவோம் என புதிய தமிழ கம் கட்சியினர் தெரிவித்ததை அடுத்து அமைச்சர் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

SCROLL FOR NEXT