தமிழகம்

தமிழகத்தில் 9 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வட இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவக் காற்று விலகி வருகிறது. இன்னும் 10 நாட்களில் தமிழகத்திலும் விலகிவிடும். அதன் பிறகு வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கும். அப்போது மழை அதிகரிக்கும். அடுத்த இரு நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, சேலம், நீலகிரி, தரும புரி ஈரோடு, சிவகங்கை, ராமநாத புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் பொது வாக மேகமூட்டத்துடன் காணப் படும். லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்ச மாக கோவை மாவட்டம் சின்னக்கள்ளாரில் 7 செமீ, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT