சீன அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு பாதுகாப்புக்காக சென்னை விமான நிலைய பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் 
தமிழகம்

சீன அதிபருக்கு கூடுதல் பாதுகாப்பு; சென்னை சாலைகளில் போக்குவரத்து முடங்க வாய்ப்பு: மக்கள் தயாராக இருக்க போலீஸார் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை

சீன அதிபருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதால் சென்னையில் போக்குவரத்து முடங்க வாய்ப்பு உள்ளது என்றும் பொதுமக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள ஓட்டலுக்கு செல்கிறார். பின்னர் ஓட்டலில் இருந்து மாலை 4 மணியளவில் மாமல்லபுரத்துக்கு காரில் செல்கிறார். பின்னர் மீண்டும் மாமல்லபுரத்தில் இருந்து காரில் ஓட்டலுக்கு வருகிறார். மறுநாள் மீண்டும் காரில் கோவளம் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கிண்டிக்கு காரிலேயே திரும்புகிறார். பின்னர் அங்கிருந்து காரிலேயே விமான நிலையத்துக்கு சென்று சீனா புறப்படுகிறார்.

சென்னை நகர சாலைகளில் சீன அதிபர் அதிக நேரம் பயணம் செய் வதால் அண்ணா சாலை, பழைய மகாபலிபுரம் சாலை (ராஜீவ் காந்தி சாலை), கிழக்கு கடற்கரை சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சீன அதிபர் சாலையில் செல்லும் நேரத்தில் அந்த பகுதியை சுற்றி லும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

இதனால் சென்னையில் வெள்ளி மதியம் 12 மணியில் இருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும். இதனால் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்தவரை இந்த பகுதிகளில் உள்ள சாலைகளை பயன்படுத் தாமல் தவிர்ப்பது நல்லது. போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கினால் அதை ஏற்றுக்கொள்ளும் வகை யில் தயார் நிலையில் இருக்க போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், சென்னை மாமல்ல புரம் கடல் பகுதிகளில் இந்திய கப்பற்படை, கடலோர காவல் படை யின் 6 கப்பல்கள் பாதுகாப்புக் காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனாவை சேர்ந்த ஒரு போர்க்கப் பலும் இந்திய பெருங்கடல் அருகே சர்வதேச எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 100 அதிவேக படகுகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் கடல் பகுதி முழுவதும் சுற்றி வருகின்றனர். சென்னை மாமல்லபுரம் கடல் பகுதிகளில் இந்தியகப்பற்படை, கடலோர காவல் படையின் 6 கப்பல்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT