சென்னை
எழுத்துத் தேர்வு நடத்தாமல் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி யிடங்களை நிரப்ப தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கல்லூரி களில் காலியாக உள்ள 2 ஆயி ரத்து 300 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 4-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட் டுள்ளது. இந்த அறிவிப்பாணை யில் அனுபவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங் கள் நிரப்பப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறி விப்பை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த சுப்ர மணியன் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘எழுத்து தேர்வு நடத்தாமல் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங் களை நிரப்ப பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணை சட்ட விரோத மானது. இதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற வாய்ப்புள் ளது. எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ள அறிவிப் பாணைக்கு தடை விதித்து அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, ‘‘இது போன்ற அரசுப் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு மூலமாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் உள்ள தோட்டப் பணிகளுக்குக் கூட எழுத்துத்தேர்வு நடத்தப்படுகிறது.
எனவே இதுதொடர்பாக உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்ளிட்டோர் வரும் அக்.15-க் குள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.