சென்னை
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதி பர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் இன்று சந்தித்துப் பேசுகின்றனர். இரு தலைவர்களையும் வரவேற்க சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை கலைநிகழ்ச் சிகளுடன் பிரம்மாண்ட ஏற்பாடு களை தமிழக அரசு செய்துள்ளது. சென்னை, மாமல்லபுரம் ஆகிய இடங்கள் விழாக்கோலம் பூண்டுள் ளன. தலைவர்கள் வருகையை யொட்டி வரலாறு காணாத பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
‘இந்தியா - சீனா 2-வது முறை சாரா உச்சிமாநாடு’, சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரைச் சாலை யில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் இன்றும் நாளை யும் நடக்க உள்ளது. இதில் பங் கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளு நர், முதல்வர் உள்ளிட்டோர் வர வேற்கின்றனர். அங்கிருந்து ஹெலி காப்டரில் கோவளம் செல் லும் பிரதமர், அங்குள்ள தாஜ் பிஷர் மேன்ஸ் கேவ் ஓட்டலில் தங்குகிறார்.
அதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங் கர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரி பாதி உள்ளிட்டோர் வரவேற் கின்றனர்.
விமான நிலைய நுழைவாயி லில் தமிழக அரசு சார்பில் சீன அதி பருக்கு மேளதாளம் முழங்க உற் சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட் டுள்ளன. சாலையோர பூங்கா புதுப் பிக்கப்பட்டு, இருநாட்டு தேசியக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள் ளன.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வரும் ஜின்பிங், மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுக் கிறார். அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க் கமாக 49 கி.மீ. பயணித்து மாமல்ல புரம் செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் வரவேற் கின்றனர்.
பிரதமரும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை பார்வையிட்டுவிட்டு மாலை 6 மணிக்கு கடற்கரைக் கோயி லுக்கு செல்கின்றனர்.
இரு தலைவர்களும் நடந்த வாறு பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடுகின் றனர். அங்கு நடக்கும் இசை, கலைநிகழ்ச்சிகளையும் பார்வை யிடுகின்றனர்.
ஸ்டாலின், ரஜினிக்கு அழைப்பு
கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் இரவு 8.45 மணிக்கு கடற்கரை கோயில் பகுதியிலேயே சீன அதிபருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். இதில் மத்திய அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின் றனர். இந்த விருந்தில் பங்கேற்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், தமிழக பாஜக தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாமல்லபுரம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு 9.50 மணி அளவில் கிண்டி ஓட்டலுக்கு திரும்பும் சீன அதிபர், இரவு அங்கு தங்குகிறார். பிரதமர் மோடி, கோவளம் ஓட்டலில் தங்குகிறார்.
நாளை காலை 9 மணிக்கு கிண்டி யில் இருந்து காரில் கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கேவ் ஓட்ட லுக்குச் செல்லும் சீன அதிபரை பிர தமர் மோடி வரவேற்கிறார். அங்கு இருவரும் 40 நிமிடங்கள் தேநீர் விருந்தில் பங்கேற்று நாட்டு நல்லுற வுகள், வர்த்தகம், சர்வதேச பிரச் சினைகள் குறித்து விரிவாக பேசு கின்றனர். அதைத் தொடர்ந்து 10.50 முதல் 11.40 வரை இந்திய - சீன குழு வினருடனான பேச்சுவார்த்தை யில் ஜின்பிங், மோடி இருவரும் பங்கேற்கின்றனர். 11.45 மணிக்கு சீன அதிபர், அதிகாரிகளுக்கு பிரதமர் மதிய விருந்து அளிக்கிறார். பின்னர் பகல் 12. 45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் ஜின்பிங், 1.30 மணிக்கு சீனா புறப்பட்டு செல்கிறார்.
இந்திய பிரதமர் - சீன அதிபரின் சந்திப்பையொட்டி இரு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சென்னை வந்துள்ளனர். இரு நாடுகளிலும் பரஸ்பரம் முதலீடு செய்வது, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் பேச்சு நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
சீன அதிபர், பிரதமரை வரவேற் கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. கிண்டி முதல் மாமல்லபுரம் வரை சீன அதிபர் செல்லும் சாலை யில் 34 இடங்களில் கரகாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காவடி யாட்டம், பொய்க்கால் குதிரையாட் டம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. 10-க்கும் அதிகமான இடங்களில் தமிழகத்தின் பண்பாடு, கலாச் சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வளைவுகள் அமைக்கப் பட்டுள்ளன.
பல இடங்களில் சாலையோர சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட் டுள்ளன. முக்கிய இடங்களில் இந்திய சீன தேசியக் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலையோரங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு சுவர்களில் வர்ணங் கள் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட் டுள்ளன. பள்ளி மாணவர்கள் இந்திய சீன தேசியக் கொடியுடன் சீன அதிபரை வரவேற்க சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அதி காரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். விமான நிலையம் முதல் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் வரை வாழை மரங்கள், கரும்பு, தோர ணங்களால் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர் கள் வருகையால் சென்னையும் மாமல்லபுரமும் விழாக்கோலம் பூண்டுள்ளன.
சீன அதிபரின் வருகையை யொட்டி சென்னை, கோவளம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாது காப்புப் பணிக்காக 15 ஆயிரம் போலீ ஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மீனம் பாக்கம் விமான நிலையம் முதல் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட் டல் வரை காவல் துறையினர் நேற்று காலை பாதுகாப்பு ஒத்திகை நடத் தினர். மாலையில் மாமல்லபுரத் திலும் பாதுகாப்பு மற்றும் அணி வகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
போக்குவரத்து தடை
விமான நிலையம் முதல் கிண்டி வரை ஜிஎஸ்டி சாலை, சர்தார் படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள் ளது. தலைவர்கள் வரும் நேரத் தில் சாலைகளில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள் ளது. மாமல்லபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடு முறை விடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை விடுதிகள், திரையரங் குகளும் 2 நாட்களுக்கு மூடப்படுகின்றன.