நாங்குநேரியிலுள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள். 
தமிழகம்

நாங்குநேரியில் 11 அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி

நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு தங்கமணி, ராஜேந்திரபாலாஜி, ராஜலட்சுமி, செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனி வாசன், உதயகுமார், விஜய பாஸ்கர், காமராஜ், கடம்பூர் ராஜு, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகிய 11 பேர் முகாமிட்டுள்ளனர்.

வரும் 13, 14, 17-ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியின் பல்வேறு இடங்களில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இப்பகுதிகளை அமைச்சர்கள் தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, வி.எம்.ராஜலெட்சுமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் செங்குளம் பகுதி யில் அதிமுக நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், விஜயபாஸ்கர், வி.எம். ராஜலெட்சுமி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். முதல்வருக்கான வரவேற்பு, பிரச்சார யுக்தி ஆகியவை குறித்து அப்போது நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஆலோசித்தனர்.

அமைச்சர் மயக்கம்

தொகுதியின் பல்வேறு பகுதி களில் அமைச்சர்கள் 11 பேர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

களக்காடு பகுதியில் அதிமுக வேட்பாளருக்காக வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென்று மயங்க மடைந்தார்.

அங்கிருந்த கட்சியினரும், ஆதர வாளர்களும் அவரை காரில் ஏற்றி, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடும் வெயிலில் வாக்கு சேகரித்த தால் உடல்சோர்வு காரணமாக அமைச்சர் மயக்கம் அடைந்த தாகவும், சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT