தமிழகம்

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணனுக்கு 30 நாள் பரோல்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன்(71) தற் போது கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இவரது மனைவி மாரியம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மேட்டூர் கருமலைக்கூடலில் உள்ள தனது மகள் ஜெயம்மாள் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தாயாரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனது தந்தை மாதை யனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது மகள் ஜெயம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதில், “எனது தந்தை மாதையன் கடந்த 1987-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். சுமார் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.

தாயின் உடல்நிலை பாதிப்பு

இதுவரை தமிழக அரசு அவரை விடுதலை செய்யவில்லை. இந் நிலையில் எனது தாயார் மாரி யம்மாளின் உடல்நிலை மோச மாக உள்ளதால், எனது தந்தை மாதையனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு மாதையனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT