சென்னை
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை அரசு பொது மருத்துவ மனையில் டாக்டர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர் களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும், எம்சிஐ விதிப்படி டாக்டர் களின் எண்ணிக்கையை மருத் துவக் கல்லூரி மருத்துவமனை களில் குறைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து அரசு மருத் துவர் சங்கங்கள் இணைந்து தமிழ் நாடு அரசு டாக்டர்கள் கூட்ட மைப்பைத் தொடங்கினர். கூட்ட மைப்பில் எடுத்த முடிவுகளின்படி காலவரையற்ற உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 6 வாரத்தில் கோரிக்கைகள் பற்றி முடிவு எடுப்பதாகவும், கோரிக்கைகளை பரிசீலனை செய்ய ஐஏஎஸ் அதிகாரியான செந்தில்ராஜ் என்பவரை நியமிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று தங்களுடைய அனைத்து போராட்டங்களையும் அரசு டாக்டர்கள் வாபஸ் பெற்றனர். 6 வார கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
ஆனால், தமிழக அரசு கோரிக் கைகளை நிறைவேற்ற எந்த நட வடிக்கையும் எடுக்காததால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்க நேற்று அவசர செயற்குழு கூட்டத்தை சென்னை அரசு பொது மருத்துவமனையில் கூட்ட முயன்றனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம், கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது.
இதையடுத்து, மருத்துவமனை டவர் - 1 கட்டிடம் நுழைவு வாயி லில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர் கள் அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அரசு டாக்டர் களிடம் கேட்டபோது, “தமிழக அரசு நியமித்த ஐஏஎஸ் அதிகாரியை பல முறை சந்தித்து கோரிக்கைகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசி னோம். இறுதியாக அமைச்சரை சந்தித்தோம். அப்போது, நிதித் துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட் டிருப்பதாக மட்டும் தெரிவித்த அமைச்சர், கோரிக்கைகளை நிறை வேற்றுவது குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லை.
எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்ததால்தான், நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால், அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அதனால், தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி முதல் மீண்டும் அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.