சென்னை
ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், அவர் கட்சியில் இணையமாட்டேன். மக்கள் நீதி மய்யம் கட்சியில்தான் இருப்பேன் என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (அக்.8) இசையமைப்பாளர் தேவாவைக் கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சினேகன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அக்கட்சியில் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த சினேகன், "நான் எப்படி ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சிக்குச் செல்வேன்? எனக்குப் பிடித்த தலைவராக கமல்ஹாசன் இருக்கிறார். அவரை நான் ஒரு ஆண் தேவதையாக நினைக்கிறேன். அவருடைய கட்சியில் வேட்பாளராக மக்களவைத் தேர்தலைச் சந்தித்திருக்கிறேன். அவருடைய கட்சியில் கடைநிலை உறுப்பினராக அவர் பின்னால் இருப்பேன். யாருக்காகவும் அவரை விட்டுச் செல்லமாட்டேன்" எனத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் சினேகன் என்பது குறிப்பிடத்தக்கது.