வைகை ஆற்றில் நுரை பொங்க ஓடும் கழிவுநீர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

வைகையில் நுரை பொங்க ஓடும் ரசாயனக் கழிவுநீர்- வேடிக்கை பார்க்கும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்

செய்திப்பிரிவு

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை பகுதி வைகை ஆற்றில் கழிவுநீர் நுரை பொங்க ஓடுகிறது. ஆற்றில் தண்ணீர் ஓடி ஓராண் டாகிவிட்டதால், இந்தக் கழிவுநீரை முழுவதுமாக வெளியேற்ற வழி யின்றி, மிகப் பெரிய கழிவுநீர் கிடங்காக வைகை ஆறு காட்சி அளிக்கிறது.

வைகை ஆற்றில் 30 ஆண்டு களுக்கு முன்பு மழைக் காலங் களில் சில மாதங்களாவது தண்ணீர் கரை புரண்டோடும். சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் இறங்கு வதற்கே ஆற்றில் தண்ணீர் இன்றி, தொட்டி கட்டி அழகர் இறங்கும் நிலை ஏற்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக வைகை ஆற்றில் மழைக் காலத்தில் கூட தண்ணீர் ஓட்டமில்லை. சிலசமயம் அணையைத் திறந்து விட்டால் ஆற்றின் மையப் பகுதியில் மட்டும் சில நாட்கள் தண்ணீர் ஓட்டம் இரு க்கும். இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை தாமதமாக தொடங்கினாலும் வலுத்து பெய்ததால், பெரும் பாலான கண்மாய், குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் உற்சா கமடைந்து பாசனப் பணிகளில் இறங்கி உள்ளனர்.

ஆனால், வைகை ஆற்றில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் நீரோட்டம் ஏற்பட்டு ஓராண்டாகி விட்டது.

தென்மேற்குப் பருவமழையும் சராசரி அளவு பெய்யாததால் வைகை அணை நிரம்பவில்லை.

வடகிழக்குப் பருவ மழையால் மதுரை உள்ளிட்ட தென் மாவ ட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்பு குறைவாக உள்ளதால், இந்த ஆண்டு வைகை அணை நிரம்பி தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டிவரும் தடுப் பணை களில் சாக்கடை நீரும், சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீரும் ஓரளவு தேங்கியுள்ளது. சுகாதாரமற்ற இந்த தண்ணீரில் சிறுவர்கள் குளித்து வருகின்றனர்.

அந்த இடத்தை தாண்டி மற்ற இடங்களில் பெரும்பாலும் கருப்பு நிறத்தில் கழிவுநீர் நுரை பொங்க ஓடுகிறது. ரசாயனக் கழிவுநீர் கலப்பதாலேயே நுரை பொங்குவதாக அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.

இதைத் தடுக்கவோ, முற்றி லுமாக வெளியேற்றவோ பொதுப் பணித் துறை, மாநகராட்சி யிடம் எந்தவொரு திட்டமும் இல்லை. இதனால் வைகை ஆறு தொடர்ந்து மாசடைந்து வருகிறது.

SCROLL FOR NEXT