அ.அருள்தாசன்
திருநெல்வேலி
இடைத்தேர்தலை சந்திக்கும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியின் பரிதாபங்களை பட்டியலிடலாம். தொழில்துறை யில் பின்தங்கியிருக்கும் இத்தொகுதி யில் தொடங்கப்பட்ட சிறப்பு பொரு ளாதார மண்டலத்தில் தொழில் தொடங்க பெருநிறுவனங் கள் வராததால் இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றமே மிஞ்சியிருக் கிறது.
விவசாயமே முக்கிய தொழில்
இத் தொகுதி பெருமளவு கிராமப்புறங்களை கொண்டு ள்ளது. விவசாயமே முக்கிய தொழில். வறட்சியையும், வளமையையும் இத் தொகுதியில் கண்கூடாக காண முடியும். தாமிரபரணி ஆறு பாய்ந்தோடுவதால் பாளையங் கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி களில் விவசாயம் சிறந்து விளங்குகிறது. பச்சையாறு, நம்பியாறு என மற்ற ஆறுகள் அருகருகே இருந்தாலும், நாங்குநேரி பகுதிகளில் குளத்துப் பாசனம் மூலமே விவசாயம் நடைபெறுகிறது. அதேநேரத்தில் அவ்வப்போது தண்ணீர் பிரச்சினை தொடர்ந்து விவசாயிகளையும், பொதுமக்களையும் உலுக்கி வருகிறது. விவசாயத்தை தவிர பெரிய தொழில் ஏதும் இல்லை. சிறுசிறு தொழில்கள் மட்டுமே ஆங்காங்கே நடைபெறுகிறது. இதனால் இத்தொகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் கூட பிழைப்புக்காக திருப்பூர், சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் என்று பிறமாவட்ட, மாநிலங்களுக்கு சென்றுவிடும் சூழலும் உள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம்
தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்திடவும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பெருக்கிட வும், தொழில் முனைவோரை ஊக்குவித்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு உதவியாக, பல்வேறு பொருள்களின் உற்பத்தி க்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ, தமிழக அரசு திட்டமிட்டு, கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதை தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டத்துக்கு போதிய அளவில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டதை தொடர்ந்து, 2007-ம் ஆண்டு மே மாதத்தில் இந்தச் சிறப்பு பொருளாதார மண்டலத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு முறைப்படி ஒப்புதல் வழங்கியது. டிட்கோ நிறுவனம் ஏ.எம்.ஆர். குரூப் (ஏ.எம்.ஆர்.எல் இண்டர்நேஷனல் டெக் சிட்டி லிமிடெட்) கூட்டு முயற்சியில் இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.
சுமார், 2,520 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பல்துறை உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பொறியியல், மருத்துவவியல், வாகன உதிரி பாகங்கள், மின்னணு மற்றும் மென்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் போக்கு வரத்து ஆகியவை தொடர்பான தொழில்களை தொடங்கவும், ரூ. 15 ஆயிரம் கோடி வரை முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டது. இத்திட்டம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது 70 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய அளவுக்கு முதலீடுகள் எதுவும் வரப்பெறவில்லை. பெருத்த ஏமாற்றமே தற்போதும் எஞ்சியிரு க்கிறது.
குறிப்பிட்ட தூரத்தில் தூத்துக் குடி, மதுரை, திருவனந்தபுரம் விமான நிலையங்களும், தூத்துக்குடி துறைமுகமும் இருந்தும் இங்கு தொழில்கள் தொடங்கப்படவில்லை. போதிய கட்டமைப்பு, போக்குவரத்து, தண்ணீர், மின்சார வசதிகள் செய்யப்படாததால் கடந்த பல ஆண்டுகளாக இந்த பொருளாதார மண்டலம் சுறுசுறுப்பு இல்லாமல் முடங்கியிருக்கிறது.
இந்த பொருளாதார மண்டல த்தில் பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்றெல்லாம் தொழில்துறையினர் கோரிக்கைகள் வைத்தும் அவை அரசுகளின் கவனத்தை பெறவில்லை. இந்த இடைத் தேர்தலிலும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை சிறப் பாக செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை மட்டுமே அரசியல் கட்சிகள் அள்ளி வீசுகின்றன.